சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா என்ற புகழ் பெற்ற பாடலை பாடிய ஜொனிடா காந்தி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இசையமைப்பாளர் அனிருத்தின் மிக நெருங்கிய நண்பராக கூறப்படும் ஜொனிடா காந்தி, நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் ,நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பாடகி ஜொனிடா காந்தியும் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள கிருஷ்ண குமாரும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
வாக்கிங்-டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இப்படத்தினை, விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் வினாயக் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓகே கண்மணி படத்தில் -மென்டல் மனதில், டாக்டர் படத்தில் – செல்லம்மா செல்லம்மா, மெய் நிகரா, ஓஎம்ஜி பொண்ணு உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை ஜொனிடா காந்தி பாடியிருக்கிறார்.
இவர் இசையமைப்பாளர் அனிருத்துடன் பல ஆல்பங்களிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் படங்களிலும் ,ஆல்பங்களிலும் பாடிய பல பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்து ஹிட்டடித்துள்ளதால் இவர் நடிக்கும் படமும் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நயன்தாரா ,விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கூழாங்கல்,நெற்றிக்கண் , காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.