April 29, 2025 15:33:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூரரைப்போற்று

ஒஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒஸ்கார் பொதுப்பிரிவில் தரமான 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். அந்தப் பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒஸ்கர் விருது விழா, ஏப்ரல் மாதம் 25 ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அத்துடன் நல்ல வசூலையும் குவித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒஸ்கர் விருது பரிந்துரைக்கான தகுதி பட்டியலுக்கு படம் தேர்வாகியுள்ளது.

இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஒஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் காணொலி வாயிலாக பார்வையிடுவார்கள்.

மொத்தமாக தேர்வாகியுள்ள 366 திரைப்படங்களில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே ஒரு படமாக சூரரைப் போற்று திரைப்படம் இருப்பது சிறப்புக்குரியது .

ஒஸ்கர் விருதுக்கு வாக்களிக்க வருகிற 5 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. தெரிவு குறித்த இறுதி அறிவிப்பு மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.