January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாட்டு சூப்பர், இவர்கள் செய்யும் சேட்டைகள் அதைவிடவும் சூப்பர்; டாக்டர் படக்குழுவினரின் புதிய வெளியீடு

செல்லம்மா என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோவை டாக்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனான நடிகருமான சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மூவரும் இணைந்து செல்லம்மா பாடலை உருவாக்கினர். அந்த உருவாக்கம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. தற்போது அதே பாணியில் இரண்டாவது பாடலையும் உருவாக்கியிருக்கிறார்கள்

இந்த பாடலில் பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. அதைவிட சிறப்பாக மூன்று பேரும் அந்த பாடலை உருவாக்குவதற்காக உரையாடும் காட்சி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது

மூன்று பேரின் இயல்பு வாழ்க்கையில் இருக்கும் நிறை குறைகளை அவர்களே பரிகாசம் செய்து கொள்வது போல நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பது தயாரிப்பாளருக்கு பணம் செலவில்லாமல் பாடல் வேண்டும் என்று விரும்புவது இசையமைப்பாளருக்கு எத்தனை முறை சொன்னாலும் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது என்று பாடலை விட ஒருபடி மேலாக இவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இதே நேரம் படம் மார்ச் 23 ஆம் திகதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இதில் இடம்பெற்றிருக்கிறது

இந்த காட்சி அமைப்பை பார்க்கும் பொழுது இயக்குனர் நெல்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகிறது. ஏனெனில் இத்தகைய காட்சி அமைப்புகளை ரசிக்கும்படியாக சிரிக்கும் படியாக வடிவமைத்திருக்கும் நெல்சன் படத்தில் தன் முழு பலத்தையும் காட்டி இருப்பார் என்று நம்ப முடிகிறது

இந்த பாடலுக்காக அவர்கள் ஏற்படுத்திய காட்சி அமைப்பும் சிறப்பாக அமைந்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த பாடல் வெளியான 2 மணி நேரத்திற்குள்ளாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதை கண்டு களித்து பகிர்ந்து வருகிறார்கள்.