January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலைவி பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரத்திலும் சினிமா தரப்பிலும் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் தலைவி .

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .

இந்த படம் ஏப்ரல் 23ஆம் திகதி வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மறைந்தார்.

தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் .

இதற்கு முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குயின் என்ற தொடரை இயக்கி இருந்தார். குயின் வெப் சீரிஸ் வெளியாகிய நிலையில் அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது .

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி திரையரங்குகளில் தலைவி படம் வெளியாகும் என்று ஜெயலலிதாவாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.

பொதுவாக ஆளுமைமிக்க தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குவதற்கு இயக்குனர்கள் பலரும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் ஒரு சூழல் தான் தற்போது சினிமாவில் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தலைவி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தலைவி படத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.