July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷின் மிரள வைக்கும் “ஜகமே தந்திரம்” டீசர்

நடிகர் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜகமே தந்திரம்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ரிலையன்ஸ்’ நிறுவனம் வழங்க, ‘வை நொட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தனுஷ் ரசிகர்கள் படத்தை திரையரங்கில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 55 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸில் விற்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஜகமே தந்திரம் படத்தின் டீசரை படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“யார் அந்த சுருளி” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளிவரவுள்ள படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.