June 16, 2025 20:00:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏழு மொழிகளில் வெளியாகும் பாடகர் விஜய் யேசுதாஸின் திரைப்படம்!

பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள மலையாள திரைப்படமான சால்மன் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம்,இந்தி, தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது.

15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார்,

தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது இந்தத் திரைப்படம்.

3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்த படத்தை கட்டுமக்கான் மற்றும் டால்ஸ் போன்ற படங்களை இயக்கிய ஷலீல் கல்லூர் இயக்கி உள்ளார்.

சால்மன் என்பது ஒருவகை கடல் மீனாகும். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் பயணத்தில் வரும் தடைகளையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலிலேயே பயணிக்கிறது.

அது போலவே இப்படத்தின் கதையும் வாழ்வின் கறுப்பு பக்கங்களை பற்றி பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஷலீல் கல்லூர் தெரிவித்திருக்கிறார்.

சஸ்பென்ஸ், ரொமான்டிக் த்ரில்லராக படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஸ்ரீஜித் இசை அமைத்துள்ளார்.

முதல் முறையாக பாடகர் விஜய் யேசுதாஸின் சால்மன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருப்பது சினிமா வட்டாரத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.