January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மோகன்லால் நடிப்பில் வெற்றி நடை போடும் திரிஷ்யம் பாகம் 2

மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த மலையாள திரைப்படம் தான் திரிஷ்யம் பாகம் ஒன்று.

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் இது, இதன் முதல் பாகம் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படம் இந்த திரிஷ்யம் திரைப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

முக்கியமாக இலங்கையிலும் இந்த திரைப்படம் சிங்கள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சிறந்த கதையோட்டம் உள்ள ஒரு குடும்ப பின்னணியை வைத்து உணர்வுகள் மூலம் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம் த்ரிஷ்யம் எனலாம்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் OTT- யில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

நடிகர் மோகன்லால், நடிகை மீனா நடித்த திரிஷ்யம் பாகம் 2 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் எப்போதுமே சிறந்த படைப்புகளுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதை திரிஷ்யம் பாகம்-2 மூலம் தான் உணர்ந்ததாக நடிகர் மோகன்லால் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகளைத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் மாபெரும் வசூலை குவித்து இருக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

திரிஷ்யம் முதல் பாகத்தில் மோகன்லால் அந்த பையனை தான் கொல்லவே இல்லை என சாதித்து அந்த கேஸில் இருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

மோகன்லால் ஜார்ஜ்குட்டியாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு கடைசி வரை முகத்தில் எந்த ஒரு டென்ஷனையும் காட்டாமல், படம் பார்க்கும் அனைவருக்கும் டென்ஷனை ஏற்றியுள்ளார்.

6 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கேஸை போலிஸார் விசாரிக்க தொடங்குகின்றனர். அதற்காக இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் மோகன்லால் குடும்பத்தை நோட்டமிடுகின்றனர்.

இதனையடுத்து மோகன்லால் மீண்டும் இந்த பிரச்சினையில் சிக்க அதிலிருந்து மீண்டாரா என்பதே மீதிக் கதையாகும்.

படத்தின் முதல் காட்சியிலேயே மோகன்லால் அந்த பையனை புதைத்துவிட்டு வருவதை ஒருவர் பார்ப்பது போல விசாரணை ஆரம்பிப்பது படத்தின் வெற்றி தொடக்கம் என்றே கூறலாம்.

இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடக்கத்தை அழகாக கையாண்டுள்ளார், எத்தனை வாழ்த்து வேண்டுமானாலும் சொல்லலாம்.

விசாரணையின்போது மாட்டிக்கொள்ளும் மோகன்லால் கொஞ்சம் கூட எமோஷனல் ஆகாமல் நிதானமாக பேசுவது மோகன்லால் மீண்டும் ஒருமுறை தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மொத்தத்தில் திரஷ்யம் பாகம்-2 இயக்குனரின் சிறப்பான கதை அம்சத்தாலும் நடிகர் மோகன்லாலின் சிறப்பான நடிப்பாலும் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மிகப்பெரும் வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.