January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் – வைரலாகும் காணொளி!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்தக் கொரோனா காலத்திலும் உலக அளவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினதும் பாராட்டை பெற்ற ஒரு திரைப்படம்தான் இது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது அனிருத்தின் இசை என்பது யாவரும் அறிந்த உண்மையே.

மாஸ்டர் படத்தில் வந்த பாடல்கள் யாவுமே சூப்பர் டூப்பர் ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடாத ஆளே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான  அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடற்பயிற்சியின் போது இந்த வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம் தற்போது தமிழகத்தில் 100 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

அத்தோடு உலகளவில் சுமார் 250 கோடி அளவில் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.