June 11, 2025 14:07:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றத்திற்கு குவியும் லைக்குகள்!

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இளம் நடிகையாக இருந்தும் ரசிகர்களின் மனதை வென்றதுடன் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டுள்ள தமிழ் சினிமாவின் வாரிசு இவர்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். அதன் காரணமாக படவாய்ப்புகள் கையை விட்டுப் போவதை அறிந்த அவர் தற்போது  உடல் எடையை கூட்டுதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் மாடர்ன் உடைகளில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதியதொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் அடையாளமே தெரியாத அளவிற்கு கார்ட்டூன் ‘டோரா’ போல் தோற்றமளிக்கின்றார்.

இந்த படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளதுடன் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

இவர் நடிப்பில்  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்கள் வெகுவிரைவில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.