January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபுதேவா நடித்துள்ள பஹிரா பட டீசர் வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகரும் ,நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்துள்ள படம் பஹிரா.

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பஹிரா படத்தின் டீசர் குறிப்பாக சிம்பு நடித்த மன்மதன் படத்தின் ஒரு சில காட்சிகள் இங்கு நம்மைத் தொட்டுச் செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

அன்பானவன் அசராதவன்,த்ரிஷா இல்லனா நயன்தாரா, அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது ‘பஹிரா’ படத்தை இயக்கியுள்ளார்.

பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.

மன்மதன் படத்தில் நடிகர் சிம்பு தன்னுடன் பழகும் பெண்களை கொலை செய்யும் அந்த காட்சிகளை ,போன்றே பஹீரா டீசரை பார்க்கும் அனைவரையும் திகில் அடையச் செய்கிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முந்தைய படங்களைப் போலவே இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார்.

டீசரில் பிரபுதேவா விதவிதமான கெட்டப்புகளில் இளமையாக வருவது ரசிகர்களை ஆச்சரியப்படும் அளவிற்கு வைத்துள்ளது.