January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் திரிஷா…

நடிகர் சிம்பு , இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் நம்ம ஜெஸ்ஸி திரிஷா.

விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது இதனால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா புகழ் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனுடன் இணைந்து அடுத்து  ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கௌதம் மேனன் படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உடல் எடையை குறைத்து சிம்பு மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு வந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு இணைந்தது ரசிகர்களை  மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில்,சிம்பு மற்றும் திரிஷா கூட்டணியில்  வெளியாகி வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் தான் எடுக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

இது விண்ணைத்தாண்டி வருவாயா  பாகம் 2 இல்லை எனவும் இது வேறு புது வகையான கதையம்சம் எனவும் கௌதம் மேனன் தரப்பிலிருந்து கூறியுள்ளனர்.

மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி இணைவதால் இந்த புது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.