January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த்

அதி நவீன தொழில்நுட்பங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டுள்ளார்.

சென்னை டி நகரில் இளையராஜா சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஹைடெக் ஸ்டுடியோவை திறந்துள்ளார்.

இந்த ஸ்டுடியோவில் திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசைப் பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்றையதினம் இளையராஜாவின் வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் ஸ்டுடியோவை சுற்றி  பார்த்துவிட்டு “கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என இளையராஜாவிடம் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை பிரசாத் ஸ்டுடியோ தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய இளையராஜா, சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோவை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.