July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷ் நடிப்பில் உருவாகும் கர்ணன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் தனுஷின் 41வது படமான ‘கர்ணன்’ திரைப்படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

தமிழகத்திலுள்ள மாஞ்சோலை எனும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியலை பேசும் திரைப்படமாக கர்ணன் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது .

இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

இதில் யோகிபாபு,லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

‘நீதியின் ஆன்மா மரணம் எய்தாது” என்று குறிப்பிடப்பட்டு,தனுஷ் தலை மற்றும் கைகளில் ரத்தம் வழிய வழிய கைவிலங்குடன் கோபத்துடன் நிற்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .