January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள சங்கத்தலைவன்

நடிகர் சமுத்திரகனி நடித்துள்ள சங்கத்தலைவன் திரைப்படம் வரும் 26-ஆம் திகதி திரையிடப்பட இருக்கிறது.

தறியுடன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியுள்ளது இந்த சங்கத்தலைவன்.

திரைப்படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தினை உதய் புரடக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருக்கிறார்.

தறியுடன் நாவலை மையமாக வைத்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஒரு புரட்சியாளனாக காட்டப்பட்டு இருக்கிறார்.

இந்த நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமைப்பெண்களாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாய் வாழ்வியலை சாதித்து உள்ளதாக இயக்குனர் மணிமாறன் தெரிவித்திருக்கிறார் . ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல்கொடுத்த வீரமும் அவர்களின் வாழ்வியலும் இந்த நாவலை படமாக்க தூண்டியதாக இயக்குனர் கூறியுள்ளார்.

சமூக மாற்றத்திற்கான அக்கறையுடன் இது போன்ற நாவல்கள் படமாக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும் என இயக்குனர் மணிமாறன் தெரிவித்திருக்கிறார்.