January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய் சேதுபதி நடித்த’உப்பெனா’ திரைப்படம் முதல் நாளில் வசூல் சாதனை

உப்பெனா என்ற தெலுங்கு மொழி படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரமான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகிய முதல் நாளே மிகப்பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

முதல் நாள் வசூல் வேட்டையில் 10 கோடிக்கு அதிகமாக கிடைத்திருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தான் ‘உப்பெனா’.இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் .

விஜய் சேதுபதிதனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளதாக சினிமா தரப்பினர் பாராட்டியுள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கிய இந்த உப்பெனா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படம். .

தெலுங்கில் ஒரு அறிமுக நடிகரின் முதல் படத்துக்கு இவ்வளவு பெரிய வசூல் கிடைத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

உப்பெனா படத்தின் திரைக்கதை வசனம் என்பது மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.கதையோட்டம் சிறப்பாக இருப்பதாகவும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.