January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் “ஏலேய்”

அண்மைக்காலமாக கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களுக்கு பிறகு புதுப்புது படங்கள் நேரடியாகவே தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் பிரபல இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவான “ஏலேய்” திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் தற்போது சில காரணங்களால் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இம்மாதம் 28 ஆம் திகதி மாலை 3 மணிக்கு “ஏலேய்” திரைப்படம் ஸ்டார் விஜயில் வெளியிடப்பட இருக்கிறது.

2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் தான் ஹலிதா சமீம் .இந்த படம் பல விருதுகளையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் அடுத்த படைப்பான “ஏலேய்” திரைப்படம் நேரடியாகவே தொலைக்காட்சியில் வெளியிடப்படுகிறது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் சிறந்தவர் ஹலிதா சமீம் .இந்நிலையில் “ஏலேய்” திரைப்படம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் அவரின் ரசிகர்களை சென்றடையும் என அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

ஏலேய் திரைப்படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கிறார் .வைய்நாட் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படம் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களாலும் புதிய விதிமுறைகளாலும் இந்த திரைப்பட வெளியீடு என்பது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது .

இந்த புதிய மாற்றம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேரடியாகவே கொண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படைப்பாக இந்த “ஏலேய்” திரைப்படம் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளரான வைநாட் ஸ்டுடியோ தெரிவித்திருக்கிறது .

ஒரு அழகிய வாழ்க்கையை எடுத்துக் கூறும் சிறந்த கதையம்சம் கொண்ட இந்த திரைப்படமானது நேரடியாகவே இல்லங்களுக்கு வருவதையொட்டி மகிழ்ச்சி அடைவதாக படத்தின் இயக்குனர் ஹலிதா சமீம் தெரிவித்திருக்கிறார்.