போயஸ் கார்டனில் நடைபெற்ற தனுஷின் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் புதிய இடம் ஒன்றை வாங்கியுள்ளார் தனுஷ்.
அந்த இடத்தை சுத்தப்படுத்தி புதிதாக வீடு ஒன்றைக் கட்ட திட்டமிட்டுள்ளார் அவர். அதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றுள்ளது.
அந்த பூமி பூஜையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் .இதில் ரஜினியும் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் தற்போது தான் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக சென்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பிய பின்னர் இப்போதுதான் வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி முகக் கவசத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகி உள்ளதால் இந்த மாத இறுதியில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த பூமி பூஜை முடிந்ததும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவுக்கு தனுஷ் பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.