
ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் இன்று முற்பகல் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.மகன் சரண் இறுதிச்சடங்குகளை செய்தார்.
அதன் பின்னர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
