கல்விக்காக போராடும் ஒரு கிராமத்துப் பெண்ணின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘கமலி ஃப்ரொம் நடுக்காவேரி’.
அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கமலி ஃப்ரொம் நடுக்காவேரி திரைப்படம், கயல் ஆனந்தியின் சினிமா வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண் ,சமூகத்தில் பெண்களின் மீது வைக்கப்படும் தடைகளையும் தாண்டி, கல்வியைப் பெறுவதும் ,தன் திறமையை அறிந்து கொள்வதும் தான் கதையாக கூறப்படுகிறது.
கிராமத்திலிருந்து வந்து ஐஐடிக்குள் நுழையும் பெண் அந்த வழியில் சந்திக்கும் காதல், சுவாரசியங்கள், திருப்பங்கள் என இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி கூறியுள்ளார்.
இந்த கமலி ஃப்ரொம் நடுக்காவேரி திரைப்படத்திற்கு தீனதயாளன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை ,காதல் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 19ஆம் தேதி இப்படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதும் கிராமப்புறங்களில் பெண்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது .அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை எனவும், ஊர்ப் பகுதிகளில் பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டு கொண்டு தான் இருப்பதாக கூறும் இந்த காலத்திலும் அவர்களை வெளிக்கொண்டுவரும் ஒரு படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
கயல் ஆனந்தியின் ‘கமலி ஃப்ரொம் நடுக்காவேரி’ திரைப்படம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.