January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதை வென்ற கூழாங்கல்

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் டைகர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம்,இரண்டாவது இந்தியப் படம் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது கூழாங்கல்.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில்,யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான படம் ‘கூழாங்கல்’

இந்நிலையில், நெதர்லாந்து ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்றுள்ளது ’கூழாங்கல்’.

இதனை, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படக்குழுவினருடன் பெருமையுடன் டுவீட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள், இயக்குநரால் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு,தன்னுடைய பின்னணி இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா” என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் ’நெற்றிக்கண்’ படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

அத்துடன் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை தயாரித்துவரும் இந்த ஜோடி, இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.