May 15, 2025 7:45:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோனியை போற்றும் தளபதி விஜய்

இந்தக் கொரோனா காலகட்டத்திலும் கூட திரையரங்குகளில் திருவிழாவை ஏற்படுத்திய மாஸ்டர்.படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது .இந்த திரைப்படம் வெளியான 16 நாட்களுக்குள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது .

இது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட மாஸ்டர் படம் இன்றளவும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இது இப்படி இருக்க படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட விஜயின் காட்சிகளை படக்குழுவினர் யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் ஒரு காட்சியில் வேலைப்பளு அதிகமான சூழ்நிலையிலும் கூலாக முடிவெடுப்பதால் தான் தோனியை கேப்டன் கூல் என்று சொல்கிறோம் என்று அவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது தற்போது பரவலாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.