January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூரிக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி?

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் குளிரை தாங்க முடியாது என்று கூறி அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

அதன் பிறகு என்ன காரணத்தினாலோ விஜய் சேதுபதியை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார் வெற்றிமாறன்.

குணச்சித்திர கதாபாத்திரம்,வில்லன்,ஹீரோ என்று எதுவாக இருந்தாலும் இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடிக்கும் விஜய் சேதுபதி,வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

லுக் டெஸ்ட் திருப்திகரமாக இருந்ததால் விஜய் சேதுபதியை வைத்து படப்பிடிப்பை நடத்த தொடங்கி உள்ளனர் படக்குழுவினர்.

பாரதிராஜா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வயதானவராக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து சூரியின் இந்தப் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

சூரியின் படத்தை இயக்கும் வெற்றிமாறன் இந்த படத்திற்கு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் .

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதனால் இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கதாநாயகர்களுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று பார்த்தால், ஹீரோவுக்கு அப்பாவாக என்று விஜய் சேதுபதி அடுத்த அத்தியாயத்திற்கு சென்றுள்ளார்.

பொதுவாக சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது இப்படி ஒரு ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க எந்த முன்னணி நடிகர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை.