January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோதிகா நடிக்கும் புதிய படம்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஜோதிகா இல்லாத படங்களே இல்லை என்று கூறலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் ஜோதிகா.

விஜய், அஜித் ,சூர்யா, விக்ரம் ,மாதவன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர்தான் ஜோதிகா.

இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஆறு வருடங்கள் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

பின்னர்   36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார் ஜோதிகா.

இந்த படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி,ராட்சசி என கதாநாயகியை மையப்படுத்திய பல படங்களில் நடித்து வந்தார் .

ஜோதிகாவின் படம் என்றால் சும்மாவா என கேட்கும் அளவிற்கு அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின்  செக்கச்சிவந்த வானம், தம்பி ஆகிய படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

இறுதியாக கடந்தாண்டு வெளிவந்த பொன்மகள் வந்தாள் படத்திலும்  இவர் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் .

தற்போது அவர் மீண்டும் 36 வயதினிலே படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் ஏனைய விபரங்கள் குறித்து விரைவில் தெரியவரும் .