July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாகும் பிரியங்கா மோகன்

நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் தான் ப்ரியங்கா மோகன்.

டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரியங்கா மோகன்.

வரும் மார்ச் 26 ஆம் திகதி டாக்டர் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் .

பிரியங்கா மோகன் தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக நடித்துள்ளார், ஆனால் இவர் தமிழில் டாக்டர் படத்தில் தான் அறிமுகமாகியிருக்கிறார் .

அதற்குள்ளாக இந்த டாக்டர் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 40 படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்தடுத்து அடுக்கடுக்கான தமிழ் படங்களில் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளது அறிமுக நடிகைகளிடையே போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது வெளி மாநிலங்களை சேர்ந்த இளம் புயல்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதனால் தற்போது இருக்கும் அறிமுக நடிகைகளுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது என்றே நாம் கூற முடியும்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.