January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான “மாநாடு” படத்தின் டீசர்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு  இந்தப்படத்தை மிக முக்கியமாக 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்த மாநாடு டீசரை வெளியிட்டு இருப்பது சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா, ஹிந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டு படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

அத்தோடு முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்தப்படத்திற்கு ‘ரீவைண்ட்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தான் ‘மாநாடு’ படத்தில் வரும் வித்தியாசமான தோற்றங்களில் சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.