June 11, 2025 21:13:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கார்த்தியின் “சுல்தான்” திரைப்படத்தின் மாஸ் டீசர்

“ட்ரீம் வாரியர்ஸ்” எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என டீசரை பார்க்கும் போது தெரிகிறது. அத்தோடு ‘மகாபாரதத்தை ஒரு முறை போர் இல்லாமல் படித்து பாருங்க சார்’ என்ற வசனமும் படத்தை பார்க்க ஆவலை தூண்டியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.  நெப்போலியன், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.