
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் நேற்று வெளியீட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
‘கர்ணன்’ திரைப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், நட்டி, காமெடி நடிகர் யோகிபாபு, ’96’ படத்தில் நடித்த கௌரி கிஷன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாரி செல்வராஜின் முன்னைய படமான பரியேறும் பெருமாளுக்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கிராமத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை களம். எளிய மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் படமாகவும் , சில உண்மைச் சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும் என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ‘வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டபோட்ட எவனும் இல்ல’ என்று குறிப்பிட்டு, டீசரை’ வெளியிட்டுள்ளார் இயக்குநர்.
தனுஷுக்கு “அசுரன்” படம் தேடித் தந்த அந்த மாபெரும் வெற்றியை இந்த ‘கர்ணன்’ திரைப்படமும் பெற்றுத் தருமா? என பொருத்திருந்து பார்க்கலாம்.