January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூஜையுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் புதிய திரைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

பல எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றிருந்தாலும் பெருமளவு ரசிகர் பட்டாளத்தை இவர் வைத்திருந்தார்.

தமிழ் சினிமாவுக்குள் இவர் சாதிக்க வேண்டும் என்பதே இவரின் லட்சியம் ஆகும்.

அந்த வகையில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிக் பாஸ் சீசன் 4 தான்.

இந்நிலையில் அவர் புதிய படமொன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனின் சினிமா வாழ்க்கை வெற்றி பெற அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் .

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் நடிகை ரம்யா பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

இந்த படத்தில் முக்கியமாக தற்போது பல படங்களில் நடித்து வரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

“டம்மி டப்பாசு” என்ற படத்தின் மூலம் ரம்யா பாண்டியன் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

அவர் புடவையுடன் மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் தான் திரைத்துறையின் பக்கம் கதவு திறக்க காரணம் எனக் கூறலாம்.

இதனை அடுத்தே அவர் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்குப் பிரவேசித்து உள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் தற்போது வாணி போஜன் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இரு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் கதாநாயகர்கள் மற்றும் ஏனைய நடிகர்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.