January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குனர் ஷங்கருக்கு பிடியாணை

எந்திரன் கதை திருட்டு வழக்கில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இன்னொருவரின் கதையை திருடியே ஷங்கர் படம் எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தான் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இதை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் 11 ஆண்டுகள் கடந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆஜராகியுள்ளார். ஆனால் இயக்குனர் ஷங்கர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

இதனால் எழும்பூர் இரண்டாவது மேஜிஸ்ரேட் இயக்குனர் ஷங்கருக்கு பிடியாணை பிறப்பித்து அடுத்த வழக்கு விசாரணையை பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.