July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கலையரசன் நடிக்கும் “டைட்டானிக்” படத்தின் ட்ரைலர்

“மெட்ராஸ்” பட புகழ் கலையரசன் நடிக்கும் “டைட்டானிக்” படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சி.வி. குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஜானகிராமன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா, ராகவ் விஜய், ஆஷ்னா சாவேரி, ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்று பேர் கொண்ட காதல் கதையாகவும், அவர்களின் வாழ்க்கையை அலசும் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பாலு ஒளிப்பதிவும், நிவாஸ் பிரசன்னா இசையமைக்கவும், ராம்பிரசாத் கலை இயக்க பணிகளையும் செய்யவுள்ளனர்.

மூன்று வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்ட மனிதர்களின் வாழ்வியலை படம் பிடிக்கும் விதமாகவும் இருக்குமென்பதை இந்தப்படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது.

மாஸ்டர்,ஈஸ்வரன் என்று பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ள இந்த காலகட்டத்தில், மேல்தட்டு, நடுத்தர மற்றும் கடைக்கோடி மக்களின் வாழ்வியலை படம் பிடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் தான் திரையுலகமும் செழிப்பாக இருக்கும்.