January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையாளத்தில் அறிமுகமாகும் தமிழின் முன்னணி நடிகை

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் அறியப்பட்டவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

அதில் வரும் ஊதா கலர் ரிப்பன் என்ற பாட்டுக்கு சொந்தக்காரி இவர்தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

தமிழ்,தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா முதன்முறையாக தற்போது மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

இவர் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர்.

சிவகார்த்திகேயன், சூரி,சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்து மக்களிடையே பரிட்சயமானார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.முக்கியமாக காக்கிச்சட்டை,ஜீவா,காஷ்மோரா ,மருது ,ஈட்டி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தார் .

தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு சமீபகாலமாக தமிழில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இறுதியாக நடிகர் ஜீவா, சூரி நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில்தான் இவர் நடித்திருந்தார் .

தற்போது மூன்று வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் கார்த்திக் படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அடுத்ததாக அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த மற்றும் விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்திலும் இவர் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா முதல்முறையாக மலையாள திரை படத்தில் அறிமுகமாகிறார். மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோடியாக ஜனகணமன என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் .
டிஜோ ஜோஸ் அண்டனி இந்த படத்தை இயக்குகிறார். ஆகவே தமிழ் ,தெலுங்கு,மலையாளம் என தற்போது கொடி கட்டி பறக்க தொடங்கியுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.