முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் நடிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கும் படத்தின் அரசியல் திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார் .
அதில் முக்கியமாக இந்திரா காந்தியின் வேடத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசியலின் ஆளுமைமிக்க தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார் .இந்த படம் ஒரு புத்தகத்தை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் .
ரிவால்வர் ராணி படத்தில் கங்கனா ரணாவத் உடன் இணைந்து பணியாற்றிய சாய் கபீர் இந்திரா காந்தி தொடர்பான இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல் விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கிய திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். ஆக அரவிந்தசாமி நடித்துள்ளார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது .
கங்கனா ரணாவத் தொடர்ந்து அரசியல் சார்ந்த ஆளுமை மிக்க பெண்களின் கதாபாத்திரத்தில் நடித்து வருவது திரையுலகையும் அரசியல் துறை சார்ந்தோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது .
இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவுற்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இப்படத்தை அடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் தான் நடிக்க உள்ளதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
Happy to announce my dear friend Sai Kabir and I are collaborating on a political drama. Produced by Manikarnika Films. Written and Directed by Sai Kabir 🥰 https://t.co/wpThWV0kME
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) January 29, 2021