
கே.ஜி.எப். படம் வெளியாகி சாண்டல்வுட் எனப்படும் கன்னட ஃபிலிம் இண்டஸ்ட்ரியை உலகறிய செய்தது.
படத்தின் கதாநாயகன் யாஷிக்கு இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் ,மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகள் என பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது.
இத்தகைய வெற்றியை படக்குழுவினரும் கன்னட திரை உலகமும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரே இரவில் கே.ஜி.எப் என்றும் கோலார் தங்க வயல் என்பதும் உலகம் முழுவதும் சென்றடைந்தது.
இதற்கு கிடைத்த வரவேற்பை கொண்டு கேஜிஎப் சாப்டர் 2 உருவாக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.
சில வாரங்களுக்கு முன்பு யாஷின் பிறந்தநாள் அன்று கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
சுட்டு முடித்த துப்பாக்கியில் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்த அந்த காட்சியானது புதுவிதமாக மாசாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.இந்த டீசரை 16 கோடி பேர் உலகம் முழுவதும் பார்த்து படத்திற்கான தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர்.
இப்படி உலகம் முழுவதும் பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் யாஷின் கே.ஜி.எப் சாப்டர் 2 ஆனது ஜூலை மாதம் 16ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ்,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படம் வெளியாகும்போது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக உலகம் முழுவதும் இந்திய சினிமாவை கொண்டு சேர்க்கும் என்பது நிச்சயமான உண்மை.