January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பா.ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படம்

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தலித் சிந்தனையையும் ஆணவப்படுகொலையையும் ஒருங்கிணைத்து,தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன் மற்றும் மாரி செல்வராஜுக்கும் மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்ந்தது இந்த பரியேறும் பெருமாள்.

இதன் மூலம் நீலம் புரடக்ஷன் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கத் தொடங்கியது. இதேபோலவே மாரி செல்வராஜுக்கு தனுஷ் கால்ஷீட் கொடுக்க, கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீலம் ப்ரொடக்ஷன் பா. ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், சந்தோஷ் நாராயணன் என்ற கருத்தாழம் மிக்க இந்த கூட்டணியுடன் இணைவதால்,இந்த படம் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.