January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்

பசங்க,வம்சம்,கடைக்குட்டி சிங்கம்,என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ்,சூர்யாவை வைத்து சூர்யா 40 என்ற ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு அனேகமாக பெப்ரவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சூர்யாவின் ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவியது.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன்,சூர்யா 40 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தேர்வாகியுள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடி சேர கோலிவுட் வட்டாரத்தில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இந்த வாய்ப்பை இவர் தட்டிச்சென்றுள்ளார்.

டாக்டர் படத்தில் அனிருத் இசை அமைத்து, சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா.. செல்லம்மா பாடலுக்கு சொந்தக்காரி இந்த பிரியா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது