January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பனையேறும் தொழிலாளர்களின் வாழ்வியலை பேசும் நெடுமி

பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வியலை வெட்டவெளிச்சமாக எடுத்தியம்பும் திரைப்படம் தான் நெடுமி.

முழுக்க முழுக்க பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டும் இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுமி. இவர்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. ஓங்கி வளர்ந்த பனை மரத்தில் உயிரை பணயம் வைத்து இவர்கள் ஏறி இறக்கும் கள்ளும் ,அதை பதமாக உருமாற்றி விற்கும் பதநீரும் என இவ்வாறான தேவைகள் வயிற்றுப் பசியை போக்கவே.

இந்நிலையில் இந்தத் தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் இழப்புகளும் அதிகாரிகளின் அலட்சியமும், வேதனையின் சாட்சியாகவே இப்படத்தில் வெளிப்படும் என்கின்றனர் இயக்குனர்கள் .

முக்கியமாக இந்த திரைப்படத்தின் காட்சிகள் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் ,கதாநாயகியாக அபிநயாவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள புதுப்பாக்கம், பாலக்காடு கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

பனையேறும் தொழிலாளர்களின் வாழ்வையும் வலியையும் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நெடுமி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது .அறிமுக இயக்குனர்களான நந்தா லக்ஷ்மன் மற்றும் ஏ. ஆர். ராஜேஷ் இப்படத்தை இயக்குகின்றனர்.