July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமேசான் ப்ரைமில் வெளியாகும் மாஸ்டர்

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் திரையிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. கொரோனா காலகட்டத்திலும் இத்தகைய வெற்றி தயாரிப்பு நிறுவனத்தை திக்குமுக்காடச் செய்தது.

இப்படிப்பட்ட வெற்றிப்படமான மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 29ஆம் திகதியிலிருந்து அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி வில்லனாக, இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பரிசாக ரசிகர்களுக்கு கிடைத்தது. கொரோனா காரணமாக ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று பரவலான ஒரு கருத்து இருந்தது.

ஆனால் இதையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக இன்று வரையிலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கிறது மாஸ்டர்.

இருப்பினும் இதைத்தாண்டி தியேட்டருக்கு வராத வயதானவர்களை கருத்தில் கொண்டும் வர இயலாதவர்களை கருத்தில் கொண்டும் அமேசானில் 29 ஆம் திகதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது.