January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாதவன்-அனுஸ்கா நடிக்கும் “சைலன்ஸ்”

சிறிய இடைவெளிக்குப் பிறகு அனுஸ்கா ஷெட்டி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘நிசப்தம்’ – தமிழில் ‘சைலன்ஸ்’ என்ற பெயரோடு ஓடிடி- இணையவழி ஒளிபரப்பாக வெளியாகவுள்ளது.

அமெரிக்க கதைக்களத்தில் ஒரு கிரைம் திரில்லர் படம் என்பதை டிரெய்லர் காட்டுகின்றது. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதமே திரைக்கு வரும் என கூறப்பட்டது.

ஆனால் கொரோனா சூழல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் படத்தை வாங்கி எதிர்வரும் 2ம் திகதி வெளியிடுவது இப்போது உறுதியாகியுள்ளது. ஒரு பாழடைந்த வீட்டுக்குள் ஒரு ஓவியத்தை தேடி அனுஷ்காவும் மாதவனும் செல்கிறார்கள்.

குற்றச் செயல் ஒன்று நடக்கின்றது. பின்னர் பொலிஸ் விசாரணை, தேடுதல் என ஒவ்வொன்றும் திகில் காட்சிகள் தான். தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனப் பெயரிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ‘நிசப்தம்’ என்ற தலைப்பை ஏற்கனவே ஒருவர் வாங்கி வைத்துள்ளதால், தெலுங்கில் நிசப்தம் என்றும், தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயருடனும் வெளியாகவுள்ளது.

சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்