January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“டான்’ ஆகும் சிவகார்த்திகேயன்

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் டான் என்ற புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது .இதை சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சிபிச் சக்கரவர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.இந்த தகவலையும் சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதைப் பார்க்கையில் கல்லூரியை மையப்படுத்தி இந்த கதைக்களம் இருக்கும் என்றே தெரிகிறது.

டாக்டர்,அயலான் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

மேலும் அனிருத்தின் இசையில் எத்தனை பாடல்கள் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1354300603623563264?s=20