January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தயாரிப்பாளராக மாறிய தமிழின் முன்னணி நடிகை

தமிழின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

அவர் வாஷி என்ற புதிய மலையாளப் படத்தை தனது குடும்பத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ் .

தொடரி, ரெமோ ,சர்க்கார், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார் .

தற்போது கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் .அதுமட்டுமில்லாமல் முன்னணி இயக்குனர் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் என்ற படத்திலும் அவர் நடிக்கிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் வாஷி என்ற படத்தை தயாரித்து அதில் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் தயாரிப்பாளர் ஆகியுள்ள தங்களது அபிமான நடிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மோகன்லால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக டோவினோ தோமஸ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார்,தாய் மேனகா சுரேஷ்குமார், அவரது அக்கா ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.