January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் “ஏலே”

சில்லுக்கருப்பட்டி என்ற அழகான சிறுகதைகளை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இயக்குனர் ஹலிதா சமீம், அடுத்து ஒரு அழகான கிராமத்து கதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறார்.

வைநாட் சசி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து வழங்கும் ஏலே என்ற திரைப்படம் வருகிற பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கிறது.

இதற்கு ஒரு முன்னோட்டமாக படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சமுத்திரகனி, மணிகண்டன், மதுமதி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நமது பள்ளிக்கூட நாட்களில்,பள்ளியின் வெளியே வண்டியில்,ஐஸ் விற்றுக் கொண்டிருக்கும் ஐஸ் மாமாவை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையாக இது பின்னப்பட்டு இருக்கிறது என்பது டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

மேலும் கிராமத்து வாழ்வியல்,அங்குள்ள பழக்க வழக்கம், அங்கு நிகழும் சடங்குகள் என அனைத்தும் கலந்த உணர்வுபூர்வமான படமாக இது இருக்கும் என்று டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

தேனி ஈஸ்வர் கேமராவை கையாண்டிருக்கிறார். கபீர் வாசுகி மற்றும் அருள்தேவ் என இருவர் இசை அமைக்க, வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராக இதில் பணிபுரிந்திருக்கிறார்.

பெப்ரவரி 12 உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம் நம்மை நிச்சயமாக புதியதாெரு அனுபவத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.