கடந்த ஆண்டில் அமெரிக்காவின் சிபிஎஸ் திறமையாளர் போட்டி நிகழ்ச்சியில் (CBS talent show) கலந்துகொண்டு “த வேர்ல்டுஸ் பெஸ்ட்” (The World’s Best) விருதுடன் ஒரு மில்லியன் டாலர் பரிசுப் பணத்தையும் வசப்படுத்தி முழு உலகையுமே வாய் பிளக்க வைத்தவர் தான் நம்ம தமிழ்நாட்டுப் பையன் லிடியன் நாதஸ்வரம்.
இப்போது பாலிவுட் ஹிந்திப் படமொன்றில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துவிட்டார் இந்த 14-வயது பியானோ இசைக் கலைஞர். இந்தப் படத்தை தயாரித்திருப்பது வேறு யாருமல்ல- நம்ம ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் தான்.
இந்தப் படத்தின் மற்றுமொரு சிறப்பு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு பாடலை பாடியுள்ளார்.”பாபி பீடியா”என்ற வெற்றி படத்தை தந்த “சௌமி சிவ்ஹரே “இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இசையை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர்களை பற்றிய கதை தான் இந்தப் படம்.
“ஏ ஆர் ரகுமான் ” தான் இசையமைத்து இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை.”டிரம்ஸ் சிவமணி”தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.