January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா

பிக்பொஸ் சீசன் நான்கின் போட்டியாளர்கள் இருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி பிக்பொஸ் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் கமலஹாசன் பிக்பொஸ் நான்காவது சீசன் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியாளர் தெரிவு ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதுடன் கொரோன வைரஸ்; தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அவர்களிடம் மேற்கொள்ளப்படும் சோதனையின் பின்னரே அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் .

இந்நிலையில் இரு போட்டியாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளதை தொடர்ந்து பிக்பொஸ் திட்டமிட்டபடி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.