January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் விஜயின் குட்டி ஸ்டோரி பாடல்

தளபதி விஜய் நடித்து,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடலை தளபதி விஜய் பாடியிருந்தார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவை பொருட்படுத்தாது அரசின் விதிமுறைக்கு ஏற்ப குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக,இளைய தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலின் வீடியோவை சோனி நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாகவும் பாடல் அமைந்துள்ளது. இதற்கு விஜய் அவர்களின் ஸ்டைலான நடன அசைவு பலமாக அமைந்திருக்கிறது.

இந்த பாடலை காணும் பொழுது இதுவரை மாஸ்டர் படத்தை பார்க்காதவர்கள் கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்தப் பாடல் ஏற்படுத்துகிறது.