January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் ‘குற்றமே குற்றம்’

நடிகர் ஜெய் சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக குற்றமே குற்றம் படத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது .

குறைந்த நாட்களில் படம் எடுக்கும் இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் சுசீந்திரன். அந்த வகையில் அவர் தற்போது பல படங்களை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் ஜெய் நடித்துள்ள ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸ் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

அடுத்து இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் ஆகிய படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார். இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படம் வெளிவர தயாராக இருக்கிறது .

இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிகர் ஜெய் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் ஒரு படத்திற்குதான் குற்றமே குற்றம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை குறுகிய நாட்களில் முடித்ததுபோல அடுத்தடுத்த படங்களையும் அவர் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

இது தவிர சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்,பாரதிராஜா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

குற்றமே குற்றம் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.