January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி

தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. யோகிபாபு இல்லாமல் படங்களே இல்லை என்று சொல்லலாம்.

நகைச்சுவை நடிகரான யோகிபாபுவுக்கு தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு மவுசு. தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படமான பொம்மை நாயகி என்ற படத்தில் யோகி பாபு நடித்துவருகிறார்.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில்,அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் இது வைரலாகி வருகிறது .

பொம்மை நாயகி படத்தை அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் என்றால் அதில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்றே கூறலாம்.

பல வெற்றிப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் .இந்த படம் பலராலும் கொண்டாடப்பட்டு பல விருதுகளையும் வாங்கி குவித்தது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நீலம் புரெடக்ஷன் சார்பாக 5 படங்களை இயக்குவதாக அறிவித்திருந்தார் .

இந்த ஐந்து படங்களில் ரைட்டர் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

பொதுவாக யோகி பாபுவின் எல்லாப் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பொம்மை நாயகி யோகி பாபுவை தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.