January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சந்தானத்தின் சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பல படங்கள் தற்போது வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன. அந்த வகையில் டிக்கிலோனா,பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் திரையிட தயாராக உள்ளன.

அடுத்ததாக பல படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புதிய படமான சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சபாபதி படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.படம் முழுவதும் நகைச்சுவை நிறைந்ததாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தானத்தின் ரசிகர்களுக்கும் நகைச்சுவைக்காகவே படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும்.இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது .

இதை அடுத்து சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் படம் வெளிவருவதற்கு தயாராக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த் ,ஆனந்தராஜ் மேலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமான கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகவே இந்த வருடம் நகைச்சுவை படங்களுக்கு பஞ்சமே இருக்காது என கூறலாம்.