July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் “கலியுகம்”

புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் சாதிக்க தொடங்கியுள்ளது தற்போது ஒரு ட்ரெண்டிங்காக பார்க்கப்படுகிறது.புதுமுக இயக்குனர்கள் மாறுபட்ட கதைக்களத்துடன் படங்களை எடுத்து ரசிகர்களை தம்பக்கம் சாய்த்து விடுகின்றனர். இதனால் காணாமல் போன பல பழைய முக்கிய இயக்குனர்கள் இன்று அதிகம் என்று சொல்லலாம்.

அந்த வகையில் கலியுக திரைப்படம் மூலம் இயக்குனராக பிரமோத் சுந்தர் என்பவர் உருவாகியுள்ளார்.

எதிர்காலம் குறித்த கதைகளை வைத்து படம் எடுப்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியான படங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம் .

தற்போது எதிர்காலம் குறித்த,முன்நோக்கிய ஒரு கதைக்களம் தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராக உள்ளது .

பிரமோத் சுந்தர் இதுவரை எந்த ஒரு இயக்குனரிடமும் பணிபுரியவில்லை என கூறப்படுகிறது. இவர் சில விளம்பரப்படங்களையும் குறும்படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.

தற்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய பட்ஜெட் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர்.

கலியுகம் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்த படத்திற்காக மாறுபட்ட வடிவத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தின் பிரதான வேடத்தில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சமீபத்தில் நடிகர் மாதவனுடன் இவர் இணைந்து நடித்து வெளியான படம் தான் மாறா. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஹாரர் த்ரில்லர் படமான கலியுகத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

இப்படத்தை ஆர்கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ் ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.இது ஒரு எதிர்காலம் குறித்த முன்னோக்கிய கதைக்களம் என்பதால் இந்தப் படத்தில் கலை இயக்குனரின் பணி என்பது அளப்பரியதாக இருக்கும்.

இதற்காக பல்வேறு விதங்களில் ஆராய்ச்சி செய்த பின்னரே, இந்த படத்துக்கான அரங்குகளை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் சக்தி வெங்கட்ராஜ். இந்த அரங்குகள் பார்வையாளர்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கலியுகம் படக்குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு சினிமா துறையினர், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.