July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாஸ்டர் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

பிரபல தெலுங்கு கதாநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்ட கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த சலார் படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது கே ஜி எஃப் பாகம் 2 ஐ இயக்கிவரும் பிரசாந்த் நீல்,இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது .

முன்னதாக இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜோன் ஆபிரகாம் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியாக இருப்பினும் இந்தியில் சில படங்களில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.