January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி

மலையாள மொழியில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான லூசிஃபர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் லூசிஃபர் . இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கு ரீமேக்கான லூசிபர் திரைப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது .

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய படம்தான் இந்த லூசிஃபர் .

சூப்பர் ஹிட் படமான லூசிஃபர் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தில் மோகன்லால்,மஞ்சுவாரியர்,விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்தனர்.

ஒரு அரசியல்வாதியின் மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதல் தான் இந்த கதையின் மையக்கருவாகும்.

இந்நிலையில் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிப்பதில்லை என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் ஜெயம் ரவியின் அண்ணா தான் மோகன்ராஜா. இவர் பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.

மேலும் தெலுங்கு ரீமேக்கிலும் மஞ்சு வாரியர் தான் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.